கனத்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நேற்று இரவு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கனத்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.