சாலை விபத்தில் கணினி பொறியாளர் உட்பட இருவர் சாவு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
Publish Date: Mon, 13 Oct 2008 (12:48 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (12:48 IST)
ஈரோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கணினி பொறியாளர் உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (42). இவர் இப்பகுதியில் எலக்டீசியனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம், சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த கோயமுத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கணினி பொறியாளர் சிவசங்கர் (24) கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை கோவை தனியார் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கர் இறந்தார்.