சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் தேவாலய கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர் தங்கம் காலனியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இமானுவேல் ஆலயத்திற்கு முன்பாக ஒரு கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி கூண்டின் மீது சில மர்ம நபர்கள் கல்வீசி உடைத்ததோடு, அங்கிருந்த சிலையின் மீதும் கல் வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்கள் தேவாலயத்தின் முன்பு கூடினர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் தேவாலயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கியதோடு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.