Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து கட்சி கூட்டத்தை அ.இ.அ.தி.மு.க. புறக்கணிக்கும்: ஜெயலலிதா அறிவிப்பு!

அனைத்து கட்சி கூட்டத்தை அ.இ.அ.தி.மு.க. புறக்கணிக்கும்: ஜெயலலிதா அறிவிப்பு!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:51 IST)
இல‌ங்கை‌ த‌மிழ‌ர் ‌பிர‌ச்‌சினதொட‌ர்பாஆலோ‌சி‌க்வரு‌ம் 14ஆ‌மதே‌தி முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி தலைமை‌யி‌லநடைபெஉ‌ள்அனை‌த்து‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளகூ‌ட்ட‌த்தை அ.இ.அ.‌ி.ு.க. பு‌ற‌க்க‌ணி‌க்கு‌மஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌‌யி‌னபொது‌சசெயல‌ரஜெயல‌லிதஅ‌‌றி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இதகு‌றி‌த்தஅவ‌ரஇ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," இலங்கை ராணுவத்தால் இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று ம.தி.மு.க. சார்பில் சென்னையில் அறப்போராட்டம் நடைபெறுகிறது. அறப்போராட்டம் ஆரம்பிக்கும் இடத்தில், அதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் செய்திருந்தனர்.

திடீரென்று காவல் துறையினர், வன்முறையாளர்களைப் போல களத்தில் இறங்கி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகளையும், சுவரொட்டிகளையும், பேனர்களையும் கிழித்து எறிந்து அனைத்தையும் கொண்டு சென்றுவிட்டனர். இதற்குக் காரணம் கேட்டால், மேலிடத்தின் உத்தரவு என்று காவல் துறையினரால் கூறப்படுகிறது.

தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க. நடத்தும் அறப்போராட்டத்தில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துரை வழங்கப்பட இருக்கிறது என்றவுடன், காவல்துறையினர் மூலம் நடத்தப்பட்ட இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் கருணாநிதிக்கும், காவல்துறையினருக்கும், முதலில் என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பிரச்சினையை நான் கையில் எடுத்துக் கொண்டதாலும், பல தரப்பில் இருந்து தனக்கு எதிர்ப்புகள் வந்ததாலும், தற்போது இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இது ஒரு கண்துடைப்பு நாடகம்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாதபோது, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறும் கருணாநிதி, தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் போது, ஏன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை? இலங்கை ராணுவத்திற்கு உதவி செய்யக் கூடிய மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. ஏன் விலக்கிக் கொள்ளவில்லை?

உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும்.

அதை விட்டு விட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே, இந்தக் கண்துடைப்பு நாடகமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும்" என்றஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil