Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ்தவ தேவாலயம் தாக்குதல்: இந்து முன்னணியினர் கைது

வேலுச்சாமி, ஈரோடு

கிறிஸ்தவ தேவாலயம் தாக்குதல்: இந்து முன்னணியினர் கைது
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:34 IST)
ஈரோடு அருகே கிறிஸதவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாடியில் அடங்கிய சர்க்கரை சந்தை, பெருந்தலையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தப்பட்டது. மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணியைச் சேர்ந்த நாகராஜன் (24), சிவசக்தி (27), மருதாசலம்(24), ராஜா (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil