Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்.கே.கே.பி.ராஜா பேசிய சி.டி. வெளியீடு!

வேலுச்சாமி, ஈரோடு

என்.கே.கே.பி.ராஜா பேசிய சி.டி. வெளியீடு!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:07 IST)
முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா செல்போனில் பேசிய உரையாடல் அடங்கிய சி.டி. வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தூண்டுதலின் பேரில் நிலம் வாங்கிய விவகாரத்தில், ஆட்களை கடத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ராஜா பதவி நீக்கப்பட்டதுடன் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க வெளிமாநிலங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட சிவபாலன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குகமணியின் மைத்துனர் சுப்பிரமணி கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா சிவபாலனுடன் செல்போனில் பேசிய சி.டி.யை அவர் வெளியிட்டார்.

அந்த சி.டி.-யில் முன்னாள் அமைச்சர் ராஜா சிவபாலனுடன் பேசும்போது, ``நான் ராஜா மாமா பேசுகிறேன். உனக்கு என்ன வேணும்'' என்கிறார். அதற்கு சிவபாலன், ``நீங்க கொடுத்தது எனக்கு போதும். எங்க அம்மாதான் ஆறு ஏக்கர் கேட்கிறார்'' என்று கூறுகிறார். இதற்கு ராஜா, ``ஏண்டா, உங்க இடத்தை மட்டும் கேட்கிறீங்களா, இல்லை கிறிஸ்துவர்களுக்கான இடத்தையும் கேட்கறீங்களா? மற்றவை நேரில் பேசிக்கொள்ளலாம்'' என்கிறார்.

இதேபோல் காஞ்சிகோவிலை சேர்ந்த சின்னப்பன் சிவபாலனிடம் பேசும்போது, ``நம்ம டீலிங் நம்ம நாலுபேரை தவிர யாருக்கும் தெரியவேண்டாம்'' என்கிறார்.

இந்த சி.டி. வெளியான சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil