Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைத் தமிழரை காப்பாற்ற முன்வர வேண்டும் கருணா‌நி‌தி: சர‌த்குமா‌ர்!

இலங்கைத் தமிழரை காப்பாற்ற முன்வர வேண்டும் கருணா‌நி‌தி: சர‌த்குமா‌ர்!
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (10:22 IST)
''இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தனது அதிகார ஆசைகளை தவிர்த்தும், அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டும், தமிழ் இனம் வாழ களம் இறங்கி போராட முன் வந்தால் துணை நிற்போ‌ம் எ‌ன்று‌ம் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி களம் இறங்குவேன்'' என்று‌ம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ''தமிழினப் போராளிகளை வேரறுப்போம் என்று இலங்கை ராணுவம், தான் நடத்தும் இராணுவத் தாக்குதல்களால் அங்கு வாழ்கிற ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே கருவறுக்க முயலும் படுபாதக செயலுக்கு, மறைமுகமாக இந்திய அரசும் துணை போகிறதோ என்ற வெகுநாளைய சந்தேகம், இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் புலிகளின் தாக்குதலில் படுகாயமுற்றனர் என்ற சமீபத்திய நிகழ்வால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கையின் உள் விவகாரங்களில் இராணுவத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ரகசியமாக உதவி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனி அணிகளாக போராடுவது பயனற்றது என்பதே எங்கள் கட்சியின் கருத்து.

கடந்த 19-12-2006 அன்று தமிழக முதலமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திலேயே ஈழப் பிரஜையின் தன்மையை புரிந்து கொண்டு, உள்ளார்ந்த உணர்வோடு இனப்பிரச்சனையை தீர்த்திட ஒரு குழு அமைத்திட வேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று இலங்கை அரசோடும், தமிழ் இன போராட்ட அமைப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்திட, அதற்கான இந்திய அரசின் அனுமதியை தமிழக முதலமைச்சர் பெற்றிட வேண்டும். மேலும் அக்குழுவில் நானும் பங்கேற்பதற்காக தயாராகவே உள்ளேன் என்பதையும் தெரிவித்திருந்தேன்.

உடனடியாக தமிழக முதலமைச்சர், மத்திய அரசை நிர்ப்பந்தித்து, இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ தாக்குதல்களை உடனடியாக நிறுத்திடவும், திறந்த மனதோடு, சுமூக பேச்சுவார்த்தைகளை இந்திய அரசே முன்னின்று தொடங்கிடவும், இலங்கை அரசை கடுமையாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தனது அதிகார ஆசைகளை தவிர்த்தும், அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டும், தமிழ் இனம் வாழ களம் இறங்கி போராட முன் வந்தால் அதற்கு சமத்துவ மக்கள் கட்சி துணை நிற்கும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி களம் இறங்குவேன் என்று சர‌த்குமா‌ர் தெ‌‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil