சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தது காலரா நோயால் அல்ல என்று மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலரா பரவாமல் இருப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் குடிதண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் காலரா நோய் இல்லை என்றும், இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று தண்டையார்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற மா.சுப்பிரமணியன், அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
மேலும், சுனாமி குடியிருப்பில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்தும் மேயர் ஆய்வு செய்தார்.