Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌த் த‌மிழர் ‌பிர‌ச்சனை‌யி‌‌ல் த‌மிழக அரசு தூ‌ங்‌கியது ‌கிடையாது: கருணாநிதி!

இல‌ங்கை‌த் த‌மிழர் ‌பிர‌ச்சனை‌யி‌‌ல் த‌மிழக அரசு தூ‌ங்‌கியது ‌கிடையாது: கருணாநிதி!
, வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:32 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று நல்லகண்ணு பேசியிரு‌ப்பதை ப‌ற்‌றி கே‌ள்‌வி எழு‌ப்‌‌‌பி‌யுள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது'' எ‌ன்று ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி- பதில் அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

இந்திகம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரத மேடையில் `இலங்கைத் தமிழர்களுக்கு முன்பு ஆதரவளித்தேன் என்று பழைய பஞ்சாங்கத்தை முதல்வர் கருணாநிதி சொல்வது, 'போன மாதம் வரை கற்போடு இருந்தேன்' என்று சொல்வதைப் போல இருக்கிறது' என்று வைகோ பேசியிருக்கிறாரே?

அவர் அதை பேசியிருப்பதை விட, 'ஜனசக்தி' பத்திரிகையில் அதை வெளியிட்டியிருக்கிறார்களே, அதற்காக பெரியவர் நல்லகண்ணு, இளையவர் பாண்டியனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?

தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பது தான் ஆச்சரியத்தைத் தருகிறது. அவருமா இப்படி என்று? கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றி யிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. இன்னும் சொல்லப்போனால் 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்த போது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக அவர்கள் தூங்கிவிட்டதாக சொல்ல முடியுமா?

இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணாநோன்பு அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப் பேசியிருக்கிறாரே?

இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா.மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?

நாங்கள் அகதிகள் விடயம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது இலங்கையின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பது தான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்க வில்லை. இப்படி பேசியவர்தான் இலங்கை பிரச்சினையை நாம் கொச்சைப்படுத்தியதாக கூறுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரத மேடையில், இந்திய மீனவர்கள் சிங்கள ராணுவத்தினால் தாக்கப்படும் கொடுமை நின்றபாடில்லை என்பது பற்றியும் பேசப்பட்டுள்ளதே?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விரிவாக செய்திகளை வெளியிட்ட `ஜனசக்தி' நாளேட்டில் முதல் பக்கத்திலேயே மற்றொரு செய்தியும் வந்துள்ளது. அந்தச் செய்திக்கான தலைப்பு `மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா, இலங்கை ஒப்புதல்' என்பதாகும்.

அந்தச் செய்தியில், `இந்திய மீனவர்கள் தொடர்ந்து பா‌கி‌ஸ்தா‌ன் நீரிணைப்பில் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒருதிட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின் போது இதற்கான தக்கதொரு வழி முறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்' என்று கூறப்பட்டுள்ளது. மற்ற ஏடுகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.

குறிப்பாக `இந்து' நாளிதழில் இது பற்றி வெளிவந்த செய்தியில் பாக். ஜலசந்தியில் இலங்கை ராணுவத்தினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறை குறித்து முடிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ரோகிதா போகலோகாமாவை புதன்கிழமை அன்று சந்தித்துப் பேசும் போது, பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசினார்.

அப்போது இந்திய மீனவர் பிரச்சனை பற்றி தத்தம் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லையை தாண்டி வருவதாகக் குற்றஞ்சா‌ற்‌றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குறி வைத்து தாக்குவது குறித்து பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

நாமும் மத்திய அரசிடம் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தொடர்ந்து பல வழிகளில் வலியுறுத்திக் கொண்டுதான் வருகிறோம்.

மானிய விலையில் பத்து மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது?

இதுவரை வந்துள்ள செய்திப்படி நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நல்லத் திட்டத்தை உத்தமர் காந்தி அடிகள் பிறந்த அக்டோபர் 2ஆ‌ம் தேதியன்றே தொடங்கப்பட வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக அக்டோபர் மாதத்திற்கு மட்டும் கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ள‌ா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil