திடீர் உடல் நலக்குறைவால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜனுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது பற்றி தகவல் அறிந்த முதலமைச்சர் கருணாநிதி உடனே அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, வரதராஜனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, மருத்துவர்களிடமும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, ஏ.வ.பவேலு ஆகியோர் உடன் சென்றனர்.