கர்நாடகா லாரி வேலைநிறுத்தம் விலக்கல்: ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரிகள் சென்றது!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
கர்நாடகா மாநிலத்தில் லாரி வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வழக்கம்போல் லாரிகள் கர்நாடகாவிற்கு சென்றது.
கர்நாடகா மாநிலத்தில் லாரிகளில் வேககட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்தவேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதை கண்டித்து கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக நேற்று 30ஆம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு கொடுத்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு லாரிகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பால் ஈரோடு மாவட்டம் குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியான சத்தியமங்கலம் பகுதியில் இருந்து ஆயிரம் லாரிகள் கர்நாடகா செல்லாது என லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.பி.எஸ்.பொன்னுசாமி அறிவித்திருந்தார்.
தற்போது கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை டிசம்பர் மாதம் வரை தள்ளிவைத்தது. இதனால் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து குறிப்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து லாரிகள் வழக்கம்போல் கர்நாடகா மாநிலம் சென்றது.