ஈரோடு மாநகராட்சி தி.மு.க. உறுப்பினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி தி.மு.க. பெண் உறுப்பினர் உட்பட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி 31 வது வார்டு சுயேட்சை உறுப்பினர் வசந்தா, 42 வது வார்டு தி.மு.க. உறுப்பினர் நீலாவதி, வெள்ளோடப்பரப்பு பேரூராட்சி தலைவர் தவமணி, துணை தலைவர் சண்முகம், ஆறாவது வார்டு உறுப்பினர் சேகர் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டப்பாறை ஊராட்சி தலைவர் திருமூர்த்தி ஆகியோர் சென்னை சென்று அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க.-19, அ.இ.அ.தி.மு.க.-10 காங்கிரஸ்- 8, ம.தி.மு.க. - 2 மற்றும் தே.தி.மு.க. ஒன்றும் இதுதவிர ஐந்து சுயேட்சைகளும் சேர்ந்து மொத்தம் 45 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது தி.மு.க.-18 ஆகவும் அ.இ.அ.தி.மு.க.- 11 ஆகவும் மாறியுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க.வினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்ததால் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.