Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட‌ங்குள‌‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌‌ம் மூல‌ம் ‌மி‌ன் த‌ட்டு‌ப்பா‌ட்டை சமா‌ளி‌க்க நடவடி‌க்கை: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

கூட‌ங்குள‌‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌‌ம் மூல‌ம் ‌மி‌ன் த‌ட்டு‌ப்பா‌ட்டை சமா‌ளி‌க்க நடவடி‌க்கை: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!
, புதன், 1 அக்டோபர் 2008 (17:28 IST)
''இந்தாண்டு இறுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூலமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 468 மெகாவாட் மின்சாரமும், 2009 ஜூன் மாதத்தில் கிடைக்கும் மின்சாரத்தையும் வைத்துக் கொண்டு மின்சாரத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்'' எ‌ன்று ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராச‌ா‌மி கூ‌றினா‌ர்.

webdunia photoFILE
வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட மின் நிலையங்களின் உற்பத்தி குறித்தஅதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி குறித்தும், மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கிய வள்ளூர் அனல் மின் நிலைய பணிகளின் வளர்ச்சி குறித்தும், மின்வாரியம் பெல் நிறுவனத்திடம் 1200 மெகாவாட் மின் திட்ட பணிகள் ஒப்படைத்தது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வள்ளூர் அனல் மின் நிலைய முதல் ூனிட் 2010 அக்டோபரில் உற்பத்தி தொடங்கும் என்றும், 2-வது யூனிட் 2010 டிசம்பரில் தொடங்கும் என்றும் என்.டி.பி.சி. தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதே போல பெல் நிறுவன அதிகாரிகள் 2010 டிசம்பருக்குள் உற்பத்தியை தொடங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே 2010 டிசம்பருக்குள் சுமார் 2200 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.

இப்போது காற்றாலை மூலமாக உற்பத்தியான மின்சாரம் நே‌ற்று முதல் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதனை சரி செய்வதற்காக பர்னஸ் ஆயிலை பயன்படுத்தி ஓரிரு நாளில் 100 மெகாவாட் உற்பத்தி செய்யவும், கரும்பு ஆலைகளிலிருந்து 200 மெகாவாட் மின்சாரம் வாங்கவும், பயோ மாஸ் மூலமாக 55 மெகாவாட், மால்கோ போன்ற ‌நிறுவன‌த்‌திடமிருந்து ஜெனரேட்டர் மூலம் உற்பத்தியாகும் 70 மெகாவாட் வாங்கவும், பேசின் பிரிட்ஜ் மின்நிலையத்தில் நாப்தாவுக்கு பதிலாக இன்று (புதன்கிழமை) முதல் டீசலை பயன்படுத்தி 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 500 மெகாவாட் குறைந்தால் கூட இந்த நடவடிக்கைகள் மூலம் ஓரளவுக்கு சரிசெய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தாண்டு இறுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூலமாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 468 மெகாவாட் மின்சாரமும், 2009 ஜூன் மாதத்தில் கிடைக்கும் மின்சாரத்தையும் வைத்துக் கொண்டு மின்சாரத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மற்ற மாநிலங்களில் எங்கெல்லாம் நீர் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கிருந்தெல்லாம் மின்சாரத்தை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தேவையான அளவு மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகள் அ‌க்டோப‌ர் 1ஆ‌ம் தே‌தி (இ‌ன்று) முதல் மேற்கொள்ளப்படுமஎ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராச‌ா‌மி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil