சத்தி வனத்தில் பெண் யானை சாவு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
Publish Date: Mon, 22 Sep 2008 (10:55 IST)
Updated Date: Mon, 22 Sep 2008 (10:55 IST)
சத்தி வனத்தில் பெண் யானை ஒன்று நோயின் காரணமாக இறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் சத்தியமங்கலம் சரகத்தை சேர்ந்தது வடவள்ளி. இங்குள்ள முல்லன்குட்டை பகுதியில் சுமார் 22 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்துகிடந்தது.
இது குறித்து தகவல் தெரிந்தவுடன் மாவட்ட வனஅதிகாரி எஸ்.ராமசுப்பிரமணியம், வனசரகர் எஸ்.எஸ்.மணியன் உள்ளிட்டோர் சென்று பார்த்தனர். பின் கோவை வன மருத்துவர் மனோகரன் பிரேத பரிசோதனை செய்தார்.
பரிசோதனையில் வலதுகாலில் ஏற்பட்ட நோயினால் அந்த யானை இறந்தது தெரியவந்தது. மேலும் வனத்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.