Publish Date: Sat, 13 Sep 2008 (12:53 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (12:53 IST)
திருச்சியில் இருந்து கேரளாவுக்கு கடந்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
திருச்சி அருகே உள்ள மான்துறை கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது, லாரி மூலம் கடத்த இருந்த 400 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.