''
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல சரியாகி விடும் என எதிர்பார்க்கிறோம்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
கோவை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சோனியாகாந்தியின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். விஜயகாந்த் எனது நண்பர் என்றுதான் கூறி வந்தேன்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் மட்டுமல்ல, மதசார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடைய, சோனியாவின் தலைமையை ஏற்க தயாராகவுள்ள எந்த ஒரு கட்சியையும் அழைப்பது மாநில தலைவர் என்ற முறையில் எனக்குள்ள கடமைகளில் ஒன்று.
தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் சேரவேண்டும் என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் காவல்துறை செயல்பாடு சீரழிந்து விட்டது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் என்ன சொன்னார் என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் ஆலோசிக்கப்படும்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல சரியாகி விடும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் தமிழகத்துக்கு செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் 41,000 மெகாவாட் மின் உற்பத்திக்கு புதிய திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை செயல்படுத்தினால் அடுத்த 2 ஆண்டுகளில் பிரச்னை ஏற்படாது என்று தங்கபாலு கூறினார்.