Publish Date: Thu, 11 Sep 2008 (16:17 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
மின்வெட்டை கண்டித்து தடையைமீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு இன்று கூடினார்கள்.
அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.