அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், செம்பரம்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
பரமக்குடியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், துறையூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பெய்துள்ளது.