பிணை விடுதலை வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் கோஷங்கள் எழுப்பிய படி நீதிமன்றத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இதேபோல் திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாததால் வழக்கம் போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்றது. இருந்தாலும் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.