திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 2 தலைகள், 4 கைகள், 4 கால்களுடன் அதிசய பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
கலசப்பாக்கம் தாலுகா கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (28). இவர் பிரசவ வலி காரணமாக நேற்று மாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மகப்பேறு மருத்துவர்கள் குழு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர்.
இதையடுத்து, அப்பெண்ணுக்கு 2 தலைகளுடன் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்தது. அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள் இருந்தது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், ஜீன் கோளாறு காரணமாக இது போன்று மிகவும் அதிசய சம்பவம் எப்போதாவது ஏற்படுவது ஒன்று என்றனர்.
இதற்கிடையே இச்செய்தி அப்பகுதியில் காட்டுத்தீப்போல் பரவியது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மருத்துவமனைக்கு வந்து இந்த அதிசய குழந்தையை பார்த்துவிட்டுச் சென்றனர்.