Newsworld News Tnnews 0809 08 1080908006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திம்பம் மலைப்பாதையில் மூடுபனி!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
திம்பம் மலைப்பாதை மூடுபனி ஈரோடு சத்தியமங்கலம்
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (10:39 IST)
திம்பம் மலைப்பாதையில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள கடும் மூடுபனியாலலாரிகளை இயக்க ஓ‌ட்டுன‌ர்க‌ள் சிரமபட்டு வருகின்றனர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. இது பண்ணாரியில் இருந்து இருபத்தி ஏழு கொண்டைஊசி வளைவுகளை கொண்டதாகும். கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட பகுதி. இதை குட்டி கொடைக்கானல் என்றும் அழைப்பார்கள்.

கடந்த ஒருவாரமாக திம்பம் மற்றும் ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் நாள்தோறும் காலையில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்களை இயக்கமுடியாமல் ஓ‌‌ட்டுன‌ர்க‌ள் சிரமப்படுகின்றனர். சில லாரிகள் சாலை‌யி‌ன் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு மூடுபனியில் தன்மை குறைந்தவுடன் செல்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil