Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரப்பன் மனைவிக்கு 670 பக்க குற்றபத்திரிக்கை: சத்தி நடுவர் நீதிமன்றம் வழங்கியது!

ஈரோடு செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள் வேலு‌ச்சா‌மி

வீரப்பன் மனைவிக்கு 670 பக்க குற்றபத்திரிக்கை: சத்தி நடுவர் நீதிமன்றம் வழங்கியது!
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (11:58 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு 670 பக்க குற்றபத்திரிக்கையை சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றம் வழங்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி தொட்டகாஜனூரில் இரு‌ந்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களை கடத்தி சென்றான்.

இது குறித்து வீரப்பன் அவரது மனைவி முத்துலட்சுமி உட்பட 36 நபர்கள் மீது தாளவாடி காவல்துறை சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வீரப்பன் இறந்துவிட்டதால் அவரைதவிர வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உ‌ள்‌ளி‌ட்டோரு‌க்கு 670 பக்க குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil