கோவை: தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்துத் தொழில் நகரமான கோவையில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தனது கண்ணில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு, கைகளில் சிம்மினி விளக்கை ஏந்தியிருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு, கைகளில் சிம்மினி விளக்குகளை ஏந்தியிருந்தனர்.