Newsworld News Tnnews 0809 06 1080906014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜவுளி, நகை கடைக்கு உ‌ரிம‌‌க் கட்டணம்: செ‌ன்னை மாநகராட்சி அறிவிப்பு!

Advertiesment
ஜவுளி
செ‌ன்னமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு உ‌ரிம‌‌க் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை‌‌யி‌ல், "சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை, பிரவுசிங் சென்டர், நோட்டு மற்றும் புத்தக விற்பனை கடை, இருச‌க்கர வாகன‌ம் ‌விற்பனை மையம்,

செருப்புக்கடை, செ‌ல்பே‌சி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை, தேங்காய், பழங்கள் விற்பனை கடை, அடகுக்கடை, கட்டிட இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை, ‌‌மி‌திவ‌ண்டி மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை, எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை விற்பனை கடை, பேன்ஸி ஸ்டோர், ரெடிமேட் ஆடை விற்பனை கடை ஆகியவற்றில் உரிமக் கட்டணம் (லைசென்ஸ்) வசூலிக்கப்படும்.

பாத்திரக்கடை, கண் கண்ணாடி கடை, ஆட்டோ மொபைல் உதிரிபாக கடை, மின் மோட்டார் விற்பனை கடை, விளையாட்டு சாதன கடை, வாட்ச் உதிரிபாகம் மற்றும் விற்பனை கடை, தொலை‌க்கா‌ட்‌சி, டி.வி.டி. ப்ளேயர், ஆடியோ சானங்கள் விற்பனை கடை, ஆடியோ, சிடி கடை, பஞ்சு மெத்தை, தலையணை விற்பனை கடை, திருமண பத்திரிகை, வாழ்த்து அட்டை கடை ஆகியவற்றிலும் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil