Publish Date: Thu, 21 Aug 2008 (16:16 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (16:14 IST)
சென்னை உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று இரவு முதல் பார்வையாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
சுதந்திரத் தினத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமானநிலையத்தில் பார்வையார்களுக்கு கடந்த 6ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று இரவு முதல் அந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மர்ம பை: இதற்கிடையே, நேற்று நள்ளிரவு விமானநிலைய நுழைவு வாயில் அருகே மர்ம பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனால் அந்த பையில் வெடிகுண்டு இருக்குமோ என்று பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், அந்த பையில் அயல்நாட்டு இனிப்பு, பிஸ்கட் மட்டும் இருந்தது தெரிய வந்தது. இதனால் சிறிது நேரம் நிலவிய பரபரப்பு அடங்கியது.