Publish Date: Thu, 21 Aug 2008 (12:05 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (12:04 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் திருமணத்துக்குச் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தவர்கள் வந்த ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 22 பேர் படுகாயமடைந்தனர்.
சிறுகலப்பூர் என்ற இடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த அவர்கள் வந்த ஆட்டோ கல்பாடி என்ற இடத்துக்கு அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த 22 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த 15 பேர் திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.