தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தாமரைப்பாக்கம், பூண்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 100மி.மீ. மழை பெய்துள்ளது. செங்குன்றம் 90 மி.மீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சோழவரம், திருப்பத்தூர், அவினாசி, சத்தியவேடு ஆகிய இடங்களில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது.
உத்திரமேரூர், தொழுதூர், ஆர்.எஸ்.மங்களம், வந்தவாசி ஆகிய இடங்களில் 50மி.மீ., சென்னை விமான நிலையம், பள்ளிப்பட்டு, திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய இடங்களில் 40மி.மீ. மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மாலை நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.