மீனவர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ஆம் தேதி திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், கச்சத் தீவை மீட்க வேண்டும், மீன்பிடித்தல் தொடர்பான ஒரு பொது கொள்கை, ஒப்பந்தத்தினை இரு நாடுகளும் புதிதாக போட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், செப்டம்பர் 6ஆம் சென்னை பெரியார் திடலில் இளைஞரணி, மகளிரணி மாநாடுகளை சிறப்பாக நடத்தவும், அக்டோபர் 4ஆம் தேதி நெல்லையில் மாணவர் கழக மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.