சுதந்திர தினம் அன்று சென்னை, நெல்லையை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட அகில இந்திய ஜிகாத் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அலி அப்துல்லா இன்று மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டான்.
பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தாக அவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைச் சேர்ந்த சிறப்பு காவல் துறை குழுவினர் கடந்த 28 ஆம் தேதி அவனை திருநெல்வேலியில் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவன் மீது கொலை, ரயில்களில் வெடிகுண்டு வெடிக்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவன் மீது இன்று மேலும் ஒரு வழக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லாவை 10 நாட்கள் விசாரணை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நெல்லை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.