Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நா‌ளி‌ல் 3 விழாக்களில் கலந்து கொள்ளும் கருணா‌நி‌தி!

Advertiesment
ஒரே நா‌ளி‌ல் 3 விழாக்களில் கலந்து கொள்ளும் கருணா‌நி‌தி!
, புதன், 30 ஜூலை 2008 (10:29 IST)
சென்னையில் இன்று ஒரே நா‌ளி‌ல் நடைபெறும் மூ‌ன்று விழாக்களில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார். அதும‌ட்டு‌மி‌ன்‌றி தலைமை‌ச் செயலக‌ம் செ‌ன்று அலுவலக பணிகளையும் கவனிக்கிறார்.

சென்னை‌யி‌ல் இ‌ன்று 10 ம‌ணி‌‌க்கு நடைபெற உ‌ள்ள ம‌யிலாப்பூர் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலத்திற்கு கூடுதல் கட்டட‌ம் க‌ட்ட‌ப்படுவத‌ற்கான அடி‌க்க‌ல் நா‌ட்டு ‌விழா‌வி‌ல் கலந‌்து கொ‌ண்டு அடி‌க்க‌ல் நா‌ட்டு‌கிறா‌ர்.

பி‌ன்ன‌ர் தடய அறிவியல்துறை இயக்ககக் கட்டட‌த்தை முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ‌திற‌ந்து வை‌க்‌கிறா‌ர். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ற்கு செ‌ன்று மு‌க்‌கிய கோ‌ப்புகளை பா‌ர்‌க்‌கிறா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து வள‌ர்‌ச்‌சி ப‌ணிக‌ள் கு‌றி‌த்து அ‌திகா‌ரிகளுட‌ன் ஆலோசனை நட‌த்து‌கிறா‌ர்.

பின்னர் செ‌ன்னை ராயபுரத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் கணவர் மறைந்த பி.எம்.சற்குணபாண்டியனின் திருவுருவபட திறப்பு விழாவில் கலந்து கொண்டு, அவரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

இத‌ை‌த் தொட‌ர்‌ந்து மாலை 6 ம‌ணி‌க்கு திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் அன்னை சிவகாமிநகரில் நடைபெறு‌ம் சாலை மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil