Publish Date: Mon, 21 Jul 2008 (17:01 IST)
Updated Date: Mon, 21 Jul 2008 (17:01 IST)
பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை கண்டிக்கும் வகையில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மை மாணவர்கள் எரிக்க முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி, கைது செய்தனர்.