அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருச்சியில் நேற்று அதிகபட்சமாக 16 செ.மீ மழை பெய்துள்ளது.
இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழை நிலவரம் வருமாறு: திருச்சி விமான நிலையம் 13 செ.மீ, பண்ருட்டி, திருக்காட்டுபள்ளி, இலுப்பூரில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது. கீரனூர், ஓசூர், பவானி சாகர், விருதுநகரில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.
கடலூர், விழுப்புரம், திருவையாறு, சோழகிரி, பெரம்பலூரில் தலா 4 செ.மீட்டரும், காஞ்சிபுரம், காட்டுமன்னார் கோயில், தர்மபுரி, நடுவட்டம், கரூர், மாயனூர், மணப்பாறையில் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.