Newsworld News Tnnews 0807 21 1080721014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலு‌க்கு‌ச் செ‌ன்றன‌ர்!

Advertiesment
ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் கட‌ல் ‌சி‌றில‌ங்க கடற்படை
, திங்கள், 21 ஜூலை 2008 (15:06 IST)
18 நா‌ட்களு‌க்கு ‌பிறகராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ளஇ‌ன்றகடலு‌‌க்கு‌ச் செ‌ன்றன‌ர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2ஆ‌மதேதி கடலுக்கு சென்ற 1000-க்கும் மேற்பட்ட மீனவர்களை ‌சி‌றில‌ங்கடற்படையினர் கடத்தி சென்று சித்ரவதை செய்தனர். அதோடு இனியும் எங்கள் பகுதிக்கு மீன் பிடிக்க வந்தால் சுட்டு கொல்வோம் என்று எச்சரித்து அனுப்பினர்.

சி‌றில‌ங்கட‌ற்படை‌யின‌ரி‌னஅ‌த்து‌மீறலகண்டித்தும், மீனவர்களுக்கு பாதுகாப்பு தர கோரியும் ராமே‌‌ஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 3ஆூதேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மீனவர் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினர். அப்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இதை‌ததொடர்ந்து போராட்டத்தை கைவிட போவதாக மீனவர்கள் அறிவித்தனர். அதன்படி 18 நாட்களுக்கு பின் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். இன்று மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்றன.


Share this Story:

Follow Webdunia tamil