ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், பா.ம.க. வின் அனைத்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சில ஊடகங்கள், எங்கள் கட்சிக்கு எதிராக சதி செய்ய முயற்சி செய்து வருகிறது.
எங்கள் கட்சி திறந்த புத்தகம் போன்றது. ஆதரவளிப்பது என்றால் நாங்கள் சேர்ந்தே ஆதரவளிப்போம். எதிர்ப்பது என்றால் சேர்ந்தே எதிர்ப்போம். ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில்லாதது என்று கூறியுள்ளார்.