ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வட்டாச்சியர் அலுவலகம் முன் வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1600 விவசாய தொழிலாளர்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், தாராபுரம், காங்கயம் , ஊத்துக்குளி ஆகிய ஏழு இடங்களில் உள்ள வட்டாச்சியர் அலுவலகம் முன் வீட்டுமனை பட்டா மற்றும் தரிசுநிலம் விநியோகம் செய்ய கோரியும், சிறு, குறு விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கப்படாத அனைவருக்கு வழங்கவேண்டும். நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு உடனே பட்டா வழங்கவேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்தியா விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500 பெண்கள் உட்பட 1600 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.