தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை வரும் 14ஆம் தேதி முதல் திருத்தி அமைத்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக மீ.அ.வைத்தியலிங்கம், கோவையை சேர்ந்த இரா.மோகன், கோட்டூர் ராஜசேகரன், காஞ்சனா கமலநாதன், டேவிட் செல்வின், பேராசிரியர் டி.சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் அலுவல் சார்பு உறுப்பினராகவும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் நியமித்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.