மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடியில் திருச்சி மாவட்டத்தில் 74,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செளந்தையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தகம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.150 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
1997 மார்ச் 31ல் இருந்து 2007 மார்ச் 31 வரை வேளாண் கடன், எந்திரம் மற்றும் நகைக்கடன் வாங்கியவர்களும் இதில் அடங்குவார்கள்.
2007 டிசம்பர் 31 முதல் 2008 பிப்ரவரி 28 வரை செலுத்தப்படாத கடன்கள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.