Publish Date: Tue, 08 Jul 2008 (19:59 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (19:58 IST)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியதாக தீட்சிதர்கள் 6 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆறுமுகசாமி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில் தில்லை தீட்சிதர், குமார தீட்சிதர், கேதார்நாத் தீட்சிதர், மணிகண்ட தீட்சிதர், ராஜசேகர தீட்சிதர் உள்ளிட்ட 6 பேரின் மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிவனடியார் ஆறுமுகசாமி தாக்கப்படவில்லை என்றும், அவர் பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும் தீட்சிதர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.