Publish Date: Tue, 08 Jul 2008 (13:10 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (13:10 IST)
கோலாலம்பூருக்கு கடந்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை (கெட்டாமின்) கடத்த முயன்ற வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தாஜூதீன் (56) என்பவர் நேற்று நள்ளிரவு 2.30 மணி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூருக்கு செல்வதற்காக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, அவர் வைத்திருந்த சூட்கேஸை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் 5 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். சர்வதேச அளவில் இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
உடனடியாக போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.