Publish Date: Tue, 08 Jul 2008 (11:55 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (11:55 IST)
ஈரோடு மாவட்டம், வெள்ளகோவில் அருகே கோயமுத்தூர்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது மாருதி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்தில் பெரியசாமி (35), சுமதி (28), குழந்தைசாமி (55) ஆகியோர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலியான மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.