லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் கலந்து கொள்ளவில்லை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் கலந்து கொள்ளாது என்று சென்னை டேங்கர் லாரிகள் சங்கம் அறித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் நிர்வாகிகள் துரை, வரதராஜன், வேலு ஆகியோர் கூறுகையில், சென்னையில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் நாங்களும் கலந்து கொண்டால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி எங்கள் சங்கத்தில் உள்ள ஆயிரம் டேங்கர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என்றனர்.
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாததால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், தமிழ்நாடு முழுவதும் அவற்றின் வினியோகம் தடை இன்றி நடைபெறும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.