Publish Date: Tue, 01 Jul 2008 (16:51 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (16:50 IST)
திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. இது இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும்.நேற்று அதிகாலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து வெங்காயம் ஏற்றி ஈரோடு நோக்கி ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது.திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் இருந்த லாரி வரும்போது பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு திரும்பும்போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேராக பள்ளத்தில் உருண்டது.
பெரிய மரங்களை தள்ளிக்கொண்டு பத்தாவது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் வந்தது. இந்த சம்பவத்தில் லாரியின் முன் சக்கரம் தனியாக சென்று விழுந்தது. அதிஷ்டவசமாக ஓட்டுநர், உதவியாளர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.