Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய மருத்துவக் காப்பீட்டு: போக்குவரத்துக் கழகங்களில் அமல் செய்ய தடை!

புதிய மருத்துவக் காப்பீட்டு: போக்குவரத்துக் கழகங்களில் அமல் செய்ய தடை!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (11:39 IST)
தனியார் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற போக்குவரத்து ஊழியர்கள் மாதந்தோறும் ரூ.25 சந்தா செலுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் புதிய உத்தரவஎதிர்த்ததொடரப்பட்வழக்கிலசிறப்பமருத்துசிகிச்சைககாப்பீட்டுததிட்டத்தபோக்குவரத்துககழகங்களிலஅமலசெய்சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

"போக்குவரத்து ஊழியர்கள் அரசு மரு‌த்துவமனைகளில் நவீன மருத்துவத்தையும், சிறப்பு சிகிச்சையையும் பெற முடியவில்லை. ஆகவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ உதவி திட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வற்புறுத்தின.

இதன் பயனாக 28.9.1995-ல் தொழில் தகராறு சட்டம் 12(3) பிரிவின் கீழ் சிறப்பு மருத்துவ உதவி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் 1.9.95 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் பயன் அடைய மாதந்தோறும் போக்குவரத்து தொழிலாளர்கள் ரூ.5 செலுத்தி வந்தனர்.

இதற்கிடையே தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தனியார் கா‌ப்‌பீ‌ட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்தது. உதவி தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி, இதற்காக மாதந்தோறும் ரூ.25 செலுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் திருமணம் ஆகியிருந்தால், பெற்றோர் சிறப்பு மருத்துவ வசதி பெற அனுமதியில்லை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, போக்குவரத்து ஊழியர்களுக்காக சிறப்பு மருத்துவ திட்டம் இருந்து வருகிறது. ஆனால், இந்த புதிய திட்டம் 3.6.2008 முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. அரசுக்கு இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க உரிமை இல்லை.

இந்த திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பேச்சுவார்த்தை நிலுவையில் இருந்த போதே இந்த புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது தவறு. ஏற்கனவே உள்ள தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வந்த ஒப்பந்தத்தை அரசு தனது உத்தரவு மூலம் மாற்ற முடியாது. தொழிற் சங்கங்களோடு கலந்து பேசி தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

காரணம், தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசித்து முடிவெடுத்து இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. ஆகவே, இந்த புதிய திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.25 பிடித்தம் செய்யக்கூடாது. தனியார் இன்சூரன்சு மூலம் கொண்டு வந்த இந்த புதிய திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். பழைய முறையே அமலில் இருக்க வேண்டும்" எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். `புதிய சிறப்பு மருத்துவக் காபீட்டுத் திட்டத்தை' அரசு போக்குவரத்துக்கழகங்களில் அமல்படுத்த 4 வாரத்திற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

இதுபற்றி பதில் தருமாறு அரசுக்கும், 7 போக்குவரத்துக் கழகங்களுக்கும் தாக்கீது அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil