திருநெல்வேலி மாவட்டம் மயிலப்புரம் விலக்கு அருகே சாலையோரத்தில் உள்ள மரத்தில் கார் மோதிய விபத்தில் 6 வியாபாரிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாங்குளத்தில் இருந்து கார் பாளையங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
படுகாயம் அடைந்த 4 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.