Publish Date: Sat, 21 Jun 2008 (19:23 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (19:23 IST)
நடுக்கடலில் முன்னறிவிப்பின்றி சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை 754 படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிறிலங்கக் கடற்படையினர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் மென்றோ என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை மற்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குக் கொண்டு வந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.