விமானத்தில் இருந்து இறங்கிய போது படிக் கட்டில் தவறி விழுந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி காயம் அடைந்தார்.
டெல்லியில் இருந்து நேற்று இரவு 20.25 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார் செ.குப்புசாமி எம்.பி. இவர் விமானத்தில் இருந்து இறங்கியது போது படிக் கட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் குப்புசாமி வீடு திரும்பினார்.