Newsworld News Tnnews 0806 21 1080621031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நூல் விலையேற்றத்தை கண்டித்து ஜூலை 2‌ல் ஜவுளி ஆலைகள் வேலை நிறுத்தம்!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
நூல் தமிழகம் ஜவுளி தொழில்சாலைகள்
, சனி, 21 ஜூன் 2008 (13:51 IST)
ூல் விலையேற்றத்தை கண்டித்து ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி ஆலைகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ூல் விலையேற்றம் குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதுமுள்ள ூற்பாலை, விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு "பெடக்சில்' தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகை‌யி‌ல், இந்த வருடம் நாட்டில் 325 லட்சம் பேல் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுதான் அதிகமான உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்தால் அதன் விலை குறையவேண்டும். இதுதான் மரபு. ஆனால் விலை அதிகரித்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பஞ்சில் 210 பேல் ஆலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி 115 பேல் மீதிமுள்ளது என்றார்.

கூட்டத்தில் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். கழிவு பஞ்சு ஏற்றுமதியை முற்றிலும் தடைசெய்யவேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசு பஞ்சு மற்றும் கோன்நூல்களுக்கு விதித்துள்ள 4 ‌வி‌ழு‌க்காடு விற்பனை வரியை ரத்து செய்யவேண்டும். சாயக்கழிவு பிரச்சனைகள் குறித்து அரசு திட்டங்களை வகுத்து மூடப்பட்டுள்ள சாயப்பட்டறைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளி தொழில்சாலைகள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்ய‌ப்படு‌ம். இதில் ூற்பாலைகள், சைசிங், வார்ப்பிங், விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை, பிராசசிங் உள்ளிட்ட ஜவுளித்துறை சார்ந்த ஆலைகளும் கலந்து கொள்ளவேண்டும். அன்று ஈரோட்டில் மிகப்பெரிய பேரணி நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil