இந்தியா- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை குறித்து தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்தியா- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய தலைவராக விளங்கும் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியுடன் இன்று தொலைபேசியில் பேசியுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் உள்ளநிலையில், இந்தியா- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு மும்முரம் காட்டுவது ஏன் என்பது குறித்து கருணாநிதியிடம் தாம் விளக்கியதாக கூறினார்.