பலத்த மழை காரணமாக சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் 26ஆம் தேதிவை ஓடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வடமாநிலங்களான ஒரிசா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தண்டவாளங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் சென்னை வழியாக வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவுராவில் (கொல்கத்தா) இருந்து சென்னை சென்டிரலுக்கு மாலை 5.15 மணிக்கு வரும் கோரமண்டல் விரைவு ரயில் (வ.எண். 2841) ரெயில், இன்று (21ஆம் தேதி) முதல் 24ஆம் தேதி வரையும், சென்டிரலில் இருந்து காலை 8.45 மணிக்கு அவுரா புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ரயில்( 2842) இன்று முதல் 24ஆம் தேதி வரையும்.
திருச்சியில் இருந்து சென்னை வழியாக இரவு 10.30 மணிக்கு அவுரா செல்லும், அவுரா விரைவு ரயில் ரயில் (2664) 24ஆம் தேதியும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்டிரல் வழியாக நாளை (22ஆம் தேதி) காலை 9.55 மணிக்கு, சாலிமாருக்கு இயக்கப்படும் சாலிமார் விரைவு ரயில் (6323) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல், நாகர்கோவில் இருந்து காட்பாடி வழியாக 23ஆம் தேதி காலை 7.20 மணிக்கு, அவுரா செல்லும் குருதேவ் விரைவு ரயில்(2659). எர்ணாகுளத்திற்கு சென்னை வழியாக 25ஆம் தேதி காலை 9.55 மணிக்கு, கவுகாத்திக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (2507). திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக 23ஆம் தேதி 6.30 மணிக்கு, கவுகாத்திக்கு இயக்கப்படும் ரயில்களும் ( 2515) ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து கவுகாத்திக்கு 23ஆம் தேதி 10.30 மணிக்கு புறப்படும் கவுகாத்தி விரைவு ரயில் (5629). எழும்பூரில் இருந்து டிப்ருகார்க்கு இயக்கப்படும் ரயில்(5929) 26ஆம் தேதியும், பெங்களூரில் இருந்து சென்னை வழியாக இன்று காலை 6.30 மணிக்கு, கவுகாத்திக்கு இயக்கப்படும் ரயில்( 2509).
கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக நாளை (22ஆம் தேதி) காலை 4.50 மணிக்கு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் (2508) மற்றும் கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக காலை 4.50 மணிக்கு, பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில் (2510) 24 மற்றும் 26ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
கவுகாத்தியில் இருந்து எழும்பூருக்கு 22ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு வரக்கூடிய ரயில் (5630), டிப்ருகார்க்கில் இருந்து எழும்பூருக்கு 25ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு வரும் ரயில் (5930). கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக 26ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு, அவுராக்கு இயக்கப்படும் அவுரா விரைவு ரயில் (2666) உள்பட வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.