Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.7 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி ப‌றிமுத‌ல்!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
ரூ.7 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி ப‌றிமுத‌ல்!
, புதன், 18 ஜூன் 2008 (16:30 IST)
கரூரில் இருந்து நாமக்கல்லிற்கு கடத்தப்பட்ட ரஷன் அரிசி ஏற்றிவந்த லாரியை ஈரோட்டில் அ‌திகா‌ரிக‌ள் மடக்கி பிடித்தனர்.

கரூரில் இருந்து ஈரோடு வழியாக நாமக்கல் கோழி தீவனத்திற்கு ரஷன் அரிசி கடத்தப்படுவதாக கரூர் தாலுகா பறக்கும் படை வட்டாச்சியருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி ஈரோடு உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கண்ணணுடன் கரூர்- நாமக்கல் புறவளிச்சாலையில் நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து சோதனை செய்தனர். சோதனை‌யி‌ல் லா‌ரி‌யி‌ல் ஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே லாரி ஓட்டுனர் முருகன் (50)யை கைது செய்தனர். இவ‌‌ர் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர். விசாரணையில் கரூரில் இருந்து நாமக்கல் தனியார் கோழிப்பண்ணைக்கு 14 குவிண்டால் அதாவது ரூ.7 லட்சம் மதிப்பிலான ரஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து மேலும் அ‌திகா‌‌ரிக‌ள் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil